ஓம் ஸ்ரீ அருந்ததி வசிஷ்டர் குருப்யோ நமஹ

ஸ்ரீ கௌசிக மகாசிவ வசிஷ்டர்

நாடி ஜோதிட நிலையம்

26ஆண்டுகள் அனுபவம்
13000+வாடிக்கையாளர்கள்
100%தனிப்பட்ட வழிகாட்டுதல்
↓
Guruji seated with palm-leaf Nadi astrology manuscripts in his consultation room on the table
Guruji J. Muthukumarasamy(வசிஷ்டர் நாடி ஜோதிடர் · Dip. in Astrology)
எங்களை பற்றி

ஸ்ரீ கௌசிக மகாசிவ வசிஷ்டர்நாடி ஜோதிட நிலையம்

Clear full thumbprint impression beside traditional Nadi palm-leaf manuscripts
Traditional Tamil olai chuvadi palm-leaf manuscripts
ஓலைச்சுவடி

இது எங்கள் பாரம்பரியக் குலத்தொழில்; ஐந்தாவது தலைமுறையாகத் தொடர்ந்து நாடி ஜோதிடச் சேவை செய்து வருகிறோம். மகரிஷிகளும் சித்தர்களும் எழுதி வைத்த பழங்கால ஓலைச்சுவடிகளின் வழியாக, மக்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைப் பயணத்திற்கு 26 ஆண்டுகால அனுபவத்துடன் வழிகாட்டுகிறோம். ஆண்களின் வலது கைப் பெருவிரல் ரேகையையும் பெண்களின் இடது கைப் பெருவிரல் ரேகையையும் அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய ஓலைச்சுவடிகளைத் தேடி, அவற்றில் எழுதப்பட்டுள்ள பலன்களைத் துல்லியமாக வாசித்து விளக்குகிறோம்.

கல்வி, தொழில், திருமணம், குழந்தைப்பேறு, குடும்பம், உடல்நலம், ஆயுள், எதிரி மற்றும் கடன், வழக்கு, வீடு மற்றும் சொத்து, வெளிநாட்டுப் பயணம், ஆன்மிகத் தேடல்—இவை உங்கள் வாழ்க்கையில் எழும் முக்கியமான கேள்விகள். பாரம்பரிய நாடி வாசிப்பின் வழியாக அவற்றைப் பற்றி தெளிவாகப் பேசிப் புரிந்துகொள்ளுங்கள்.

26ஆண்டுகள் அனுபவம்
13000+வாடிக்கையாளர்கள்
ஆலோசனை பெறுங்கள்
AI illustration of a South Indian temple and palm-leaf manuscript at sunriseதமிழகத்தின் ஆன்மீக மரபு
பழமையான மரபு

நாடி ஜோதிடத்தின் தோற்றம்

வைத்தீஸ்வரன் கோவில்

நாடி மரபின்படி, வசிஷ்டர், அகத்தியர் போன்ற சப்தரிஷிகளும் பதினெட்டு சித்தர்களும் மனிதர்களின் வாழ்க்கையைப் பனை ஓலைகளில் பதிவு செய்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவிலில் வாழ்ந்த எங்கள் குல முன்னோர்கள் அவற்றைப் பாதுகாத்து, மக்களுக்குச் சேவை செய்து வந்துள்ளனர்.

நேரம் கேட்டு முன்பதிவு செய்யுங்கள்↗
நாடி ஜோதிடத்தின் வாழ்க்கைக் காண்டங்கள்

12 காண்டங்கள்

வாழ்க்கையில் முயற்சி செய்யக்கூடிய பலதரப்பட்ட காரியங்களின் வளர்ச்சிக்கும் தடுமாற்றங்களுக்கும் தடைகளுக்கும் குழப்பங்களுக்கு நல்ல தீர்வும், முறையான வழிகாட்டுதலும், அதற்குரிய பரிகாரங்களும் ஓலைச்சுவடிகளின் அடிப்படையில் வாசித்து விளக்கம் அளிக்கப்படும்.

Twelve palm-leaf manuscript bundles arranged around a brass lamp
12 காண்டங்களை குறிக்கும் ஓலைச் சுவடிகள்
காண்டம் 1

பொதுப் பார்வை

கீழ்கண்ட காண்டங்களின் பலன்களைச் சுருக்கமாகக் கூறுவது; மற்ற காண்டங்களைப் பார்க்க அவசியமானது.

காண்டம் 2

கல்வி, குடும்பம் & செல்வம்

கல்வி, தனம், குடும்பம், கண்பார்வை, வாக்கு முதலியவற்றைக் கூறுவது.

காண்டம் 3

சகோதரர் & சகோதரிகள்

சகோதரன், சகோதரி, தைரியம், முயற்சி, வெற்றி போன்ற பலன்களைக் கூறுவது.

காண்டம் 4

தாய், வீடு & வசதிகள்

தாய், மனைவி, கட்டிடம், வாகனம், சுகம், நீர்ப்பாசனம், அதிர்ஷ்டக் கற்கள், எண்கள் பற்றிக் கூறுவது.

காண்டம் 5

குழந்தைகள் & குடும்பத் தொடர்ச்சி

குழந்தைகள், முன்னோர் சொத்து, குழந்தைகளின் முன்னேற்றம், குழந்தைகளால் அடையும் நன்மைகள், குழந்தை இல்லாததற்கான காரணம், குழந்தைப் பாக்கியம் அடையும் வழிமுறைகள் பற்றிக் கூறுவது.

காண்டம் 6

உடல்நலம், கடன் & சவால்கள்

வாழ்க்கையில் ஏற்படும் கடன், பகை, நோய்கள், கண்டம், எதிரி, வழக்கு, தண்டனை பற்றிக் கூறுவது.

காண்டம் 7

திருமணம்

திருமண காலம், திருமணத் திசை, திருமணத்தைப் பற்றிய சில அடையாளக் குறிப்புகள் கூறுவது.

காண்டம் 8

ஆயுள் & உடல்நலம்

ஆயுள், உடல்நலம், நீண்டநோய், கண்டம், விபத்து முதலியவற்றைக் கூறுவது.

காண்டம் 9

தந்தை, செல்வம் & பொதுத் தொண்டு

தகப்பனார், செல்வம், இறை வழிபாடு, பொதுத் தொண்டுகள் பற்றிக் கூறுவது.

காண்டம் 10

உத்தியோகம், தொழில் & வியாபாரம்

வாழ்க்கையில் எந்தவிதமான உத்தியோகம், தொழில், வியாபாரம் செய்தால் லாபம் கிடைக்கும், வாழ்வில் உயர்நிலை அடைதல், அரசியல் தொடர்புகள் பற்றிக் கூறுவது.

காண்டம் 11

இரண்டாம் திருமணம் & எண்ணங்கள்

இரண்டாவது திருமணத்தைப் பற்றிய விளக்கம், அதனால் ஏற்படும் நன்மைகள், எண்ணங்கள் நிறைவேறுதல் பற்றிக் கூறுவது.

காண்டம் 12

வெளிநாட்டுப் பயணம் & செலவுகள்

வெளிநாடு செல்வதைப் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் செலவுகளைப் பற்றியும் கூறுவது.

சிறப்பு அத்தியாயங்கள்

தனி காண்டங்கள்

பொதுக் காண்டங்களிலிருந்து தனியாகப் பார்க்கப்படும் சிறப்பு வாசிப்பு அத்தியாயங்கள்.

Temple lamp and palm-leaf manuscripts for Shanti Kandam

சாந்தி காண்டம்

முன் பிறவியில் பிறந்த இடம், செய்த நன்மை தீமைகள் மற்றும் அவற்றால் ஏற்பட்ட பாவங்களால் இந்த ஜென்மத்தில் உண்டாகும் திருமணத் தடை, தொழில் நஷ்டம், எதிரி, வழக்கு, வியாதி, கடன் பிரச்சனை போன்ற தீமைகள் விலகுவதற்குரிய வழிமுறைகளைக் கூறுவது.

Rudraksha beads and sacred palm-leaf text for Deeksha Kandam

தீட்சை காண்டம்

இந்தப் பிறவியில் எந்தத் தெய்வத்தை அதிகமாக வழிபட வேண்டும், எந்தத் தெய்வத்தின் மந்திரத்தை எப்போது யாரிடமிருந்து பெற்றுச் செபிக்க வேண்டும் என்பதைக் கூறுவது. மந்திரத்தை உச்சரிப்பதால் கண்திருஷ்டி, எதிர்ப்பு, பொறாமை போன்ற தீமைகள் நீங்கி நன்மைகள் கிடைப்பதைப் பற்றியும் விளக்குவது.

A sage studying a palm-leaf manuscript for Gnana Kandam

ஞான காண்டம்

வாழ்வில் ஞான மார்க்கம் உள்ளதா, அது எப்போது யாரால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கூறுவது.

வாடிக்கையாளர் கருத்துகள்

எங்கள் வாடிக்கையாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

★★★★★
மிகவும் துல்லியமான ஜோதிட ஆலோசனை. எனது தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு சிறந்த வழிகாட்டுதல் கிடைத்தது.
ரரமேஷ்கோயம்புத்தூர்
★★★★★
திருமண பொருத்தம் மிகவும் சரியாக இருந்தது. மிகவும் நம்பகமான நாடி ஜோதிட நிலையம்.
லலட்சுமிசென்னை
★★★★★
மிகவும் பொறுமையாக அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தார். நன்றி.
பபிரகாஷ்மதுரை
நேரம் முன்பதிவு

ஆலோசனைக்கு நேரம் முன்பதிவு செய்யுங்கள்

எப்படி ஆலோசனை பெற விரும்புகிறீர்கள், எந்த மொழியில் வசன வரிகள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.

✦தனிப்பட்ட கவனத்துடன், நேரில், தொலைபேசி அல்லது Google Meet வழியாக ஆலோசனை.

WhatsApp-ல் உங்கள் கோரிக்கை திறக்கும். Send அழுத்தி அனுப்புங்கள்; குருஜி தேதி மற்றும் நேரத்தை உறுதிப்படுத்துவார்.

தொடர்பு கொள்ளுங்கள்

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்

உங்கள் ஜோதிட ஆலோசனைக்காக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு விவரங்கள்

☎தொலைபேசி+91 99527 24996
+91 80724 08089
✉மின்னஞ்சல்vashistarnadiastrologer@gmail.com◉WhatsAppவாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்
⌖முகவரி#26C1, Karuvalur Road,
Sarkar Samakulam, Kovilpalayam,
Near KMCH Hospital,
Coimbatore - 641107
◷பணிநேரம்செவ்வாய்காலை 9:00 - மாலை 6:00புதன்காலை 9:00 - மாலை 6:00வியாழன்காலை 9:00 - மாலை 6:00வெள்ளிகாலை 9:00 - மாலை 6:00சனிகாலை 9:00 - மாலை 6:00ஞாயிறுகாலை 9:00 - மாலை 6:00பிரதி திங்கள்விடுமுறை
எங்கள் இருப்பிடம்

வருகை தாருங்கள்

கோயம்புத்தூரில் உள்ள எங்கள் நிலையத்திற்கு நேரில் வருகை தந்தோ அல்லது ஆன்லைன் வழியாகவோ ஜோதிட ஆலோசனை பெறலாம்.

வரைபடத்தில் பார்க்க↗
குருஜி நாள்காட்டி குருஜியை அழைக்கWhatsApp செய்தி
ஆன்லைன் ஆலோசனை

வீடியோ அழைப்பில் சேருங்கள்

உங்கள் விவரங்களையும் வசன மொழியையும் தெரிவிக்கவும். குருஜி தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுவார்.

அழைப்பில் Settings → Captions என்பதைத் திறந்து, குருஜி பேசும் மொழியைத் தேர்ந்தெடுத்து translated captions-ஐ இயக்கவும். பிறகு உங்கள் வசன மொழியைத் தேர்வு செய்யவும். வசன மொழி ஆதரவு Google Workspace திட்டத்தைப் பொறுத்தது.

குருஜியின் Meet அறை இன்னும் இணைக்கப்படவில்லை. இணைத்த பிறகு, விவரங்களை அனுப்பியதும் அறை திறக்கும். Meet வசனங்கள் திட்டம் மற்றும் மொழி ஆதரவைப் பொறுத்தது.